முகப்பு
செய்திகள்

அல்லு அரவிந்தின் ‘சம்பூர்ண ராமாயண’ த்தில், ஸ்ரீராமனாக ராம் சரண் தேஜா!

டோலிவுட் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் நமது இந்திய இதிகாசங்களில் காலத்தால் முந்தியதான ராமாயணத்தை திரைப்படமாக தயாரிக்கவிருப்பதாக முன்னதாக அறிவித்திருந்தார்

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:02 AM
பகிர்:

டோலிவுட் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் நமது இந்திய இதிகாசங்களில் காலத்தால் முந்தியதான ராமாயணத்தை திரைப்படமாக தயாரிக்கவிருப்பதாக முன்னதாக அறிவித்திருந்தார். தான் எடுக்கவிருக்கும் ராமாயணத் திரைப்படத்திற்காக ‘சம்பூர்ண ராமாயணம்’ எனும் தலைப்பை அவர் ஃபிலிம் சேம்பரில் பதிவு செய்து வைத்திருக்கிறாராம். டோலிவுட்டின் பிரபல நகைச்சுவை நடிகரும், அந்தக் கால பிரபலமுமான அல்லு சீதாராமையாவின் மகனும். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மைத்துனருமான அல்லு அரவிந்துக்கு நிதி ஒரு பிரச்னையே இல்லை என்பதால், அவரது தயாரிப்பில் மூன்று பாகங்கள் காணவிருக்கிறதாம் சம்பூர்ண ராமாயணம். 

இந்தப் படத்துக்கான தயாரிப்பில் இறங்கும் முன்பு வேத விற்பன்னர்களை அணுகி, ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ள வேத தர்மங்களையும், நியதிகளையும் முழுதும் அறிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் அல்லு அரவிந்த். இவர் எடுக்கவிருக்கும் ராமாயணத்தைப் பொறுத்தவரை பணம் ஒரு சவாலே அல்ல... ஆனால் மக்கள் மனதில் காலம் காலமாக பதிந்து போன  ராமாயண கதாபாத்திரங்களுக்குத் தக்க நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்வது தான் இந்தப் படத்தைப் பொறுத்தவரை மிகப்பெரிய சவாலாக இருக்கக் கூடும். மெகா ஸ்டார் ரசிகர்களைப் பொருத்தவரை இதில் ராகவ ராமனாக நடிக்க ராம் சரண் தேஜாவைப் பரிந்துரைக்கிறார்களாம். கீதா ஆர்ட்ஸ் பேனரில் விரைவில் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கும் ‘சம்பூர்ண ராமாயணத்தில்’ யார் ராம, லட்சுமண, சீதா, ஹனுமன் வேடமேற்கப் போகிறார்கள் என கூடிய விரைவில் அறிவிப்பு வரலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →