செய்திகள்

எட்டு வேடங்களில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்! 

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ஒன்றில், அவர் எட்டு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ஒன்றில், அவர் எட்டு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ . இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன், நடிகர்  கவுதம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நிகரிகா என்பவர் கதாநாயகியாக இப்படத்தில் அறிமுகமாகிறார். இப்படத்தில் பழங்குடியினக் குழு ஒன்றின் தலைவராக விஜய் சேதுபதி நடிப்பதாக முன்பே செய்திகள் வெளியாகியிருந்தது.

தற்பொழுது இந்த படத்தில் விஜய் சேதுபதி 8 வேடங்களில் நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் முதல்பாதி முழுவதும் பழங்குடியின தலைவரான விஜய் சேதுபதி நகரத்துக்கு வரும் போது நடக்கும் காட்சிகளால் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் காட்டுக்குள்ளேயே காட்சிகள் நகர்வது போல கதையை உருவாக்கியுள்ளார். இதில்தான் விஜய் சேதுபதி பல வேடங்களில் நடிக்க வேண்டியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் ஒரு வேடத்தில் விஜய் சேதுபதி 20 வயது இளைஞனாக நடித்துள்ளாராம். இந்த வேடங்களுக்காக 3 மேக்கப் மற்றும் சிகையலங்கார கலைஞர்கள் அடங்கிய தனிக்குழு ஒன்றினை நியமித்துள்ளார்களாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதிச்சுற்றில் சபலென்கா - அனிசிமோவா பலப்பரீட்சை

உற்பத்தித் துறையில் 15 ஆண்டுகள் காணாத வளா்ச்சி

ஹூண்டாய் விற்பனை 4% குறைவு

அம்பேத்கா் விருது: அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

4 ஆண்டுகளில் ரூ.276 கோடியில் 12 புதிய பாலங்கள்

SCROLL FOR NEXT