முகப்பு
செய்திகள்

ஜெயம் ரவி நடித்துள்ள வனமகன் படத்தின் புதிய வீடியோ வெளியீடு

இப்படத்தின் 2 நிமிட காட்சி ஒன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 19 ஜூன், 2017 at 4:57 PM
பகிர்:

பேராண்மை படத்துக்குப் பிறகு மீண்டும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞனாக வனமகன் படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இவர் ஜோடியாக சாயிஷா சைகல் நடித்துள்ளார். விஜய் தயாரித்து இயக்கும் வனமகன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் 50-வது படம். இதன் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், வனமகன் படம் மே 12 அன்று முதலில் வெளிவருவதாக இருந்தது. பிறகு மே 19 அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது. திருட்டு விசிடியை ஒழிக்கக்கோரி மத்திய, மாநில அரசுகளிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தமிழ்த் திரையுலகில் மே 30-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் என நடிகர் விஷால் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து வனமகன் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டது. ஜூன் 23-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் 2 நிமிட காட்சி ஒன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.