திருச்சியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகிறார் நடிகர் கௌதம் கார்த்திக். உடன் (இடமிருந்து) தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், இயக்குநர் ஆர். கண்ணன். 
செய்திகள்

ரஜினி என்றுமே சூப்பர் ஸ்டாராக இருக்கட்டும்

சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிதான், அவர் என்றுமே சூப்பர் ஸ்டாராக இருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம் என்றார் திரைப்பட நடிகர் கௌதம் கார்த்திக்.

DIN

சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிதான், அவர் என்றுமே சூப்பர் ஸ்டாராக இருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம் என்றார் திரைப்பட நடிகர் கௌதம் கார்த்திக்.
நடிகர் கௌதம் கார்த்திக் நடித்து வெளிவரவுள்ள "இவன் தந்திரன்' என்ற திரைப்படம் குறித்த அறிமுக நிகழ்ச்சியை, அத் திரைப்படக் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நடத்தி வருகின்றனர். திருச்சி மாரிஸ் திரையரங்கில் இது தொடர்பான ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கௌதம் கார்த்திக் கூறியது:
"இவன் தந்திரன் 'என்னுடைய 6ஆவது படம். இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளேன். பொறியியல் பட்டதாரிகளின் உண்மை நிலை குறித்த யதார்த்தமான கதை இது. இதில், பொறியாளர்களின் நேர்முறையான அணுகுமுறை குறித்து கதை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
தற்போதுதான் திரைத்துறையில் வளர்ந்து வருகிறேன், நன்கு நிலை நிறுத்திய பின்னர்தான் தந்தையுடன் இணைத்து நடிப்பது குறித்து கூற முடியும். மேலும் அக்னி நட்சத்திரம் 2 என்ற திரைப்படம் குறித்து பேச்சு எழுந்துள்ளது. நானும், விக்ரம் பிரபுவும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறி வருகின்றனர். அதுபோன்ற எண்ணங்கள் தற்போதில்லை. சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி ஒருவர்தான். அவர் எப்போதுமே சூப்பர் ஸ்டாராக இருப்பதுதான் எனது தனிப்பட்ட விருப்பம் என்றார்.
படத்தின் இயக்குநர் கண்ணன் கூறுகையில், இந்த படத்தில் கதாபாத்திரமாகவே மாறியுள்ளார் கௌதம். அவருக்கு இப்படம் திருப்புமுனையாக அமையும். நிச்சயமாக ரசிகர்களால் இப்படம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றிப்படமாக அமையும். படத்துக்கு ஸ்ரீனிவாஸ் பிரசன்னா இசையும், ஷில்வா சண்டைப் பயிற்சியும் அமைத்துள்ளனர் என்றார்.
நிகழ்ச்சியின்போது திரைப்பட தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான தனஞ்செயன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி பரபரப்பு குற்றச்சாட்டு செய்திகள்:சில வரிகளில் 2.8.25

ஆகஸ்ட் 3: சகோதரிகள் நாள்..! கொண்டாடத் தயாரா?

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

கடற்கரை புயல்... அபர்ணா தீக்‌ஷித்!

தலைவா... கூலி டிரைலரால் உற்சாகமடைந்த தனுஷ்!

SCROLL FOR NEXT