நவம்பர் 8-ம் தேதியை யாராலும் மறக்கமுடியாது. அன்றைய தினம்தான் பணமதிப்பிழப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர்.
இதை முன்வைத்து ஒரு படம் எடுக்கத் தயாராகிவிட்டார் இயக்குநர் பாரதிராஜா.
நவம்பர் 8... இரவு எட்டு மணி என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் விதார்த் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. சென்னை மற்றும் புதுச்சேரியில் படமாக்கப்படும் இந்தப் படத்தில் வயதான கதாபாத்திரம் ஒன்றில் பாரதிரஜாவே நடிக்கக்கூடும் என அறியப்படுகிறது. ரத்னகுமார் கதையில் உருவாகும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்க வாய்ப்புண்டு என படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.