செய்திகள்

பாகுபலி 2 படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியீடு!

பாகுபலி 2 படத்தின் டிரெய்லர் மார்ச் 16 அன்று வெளிவரவுள்ளது.

எழில்

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி.

ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது. கோடைக்கால விடுமுறை சமயத்தில் படம் வெளிவருவதால் முதல் பாகத்தை விடவும் அதிகம் வசூலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் பாகுபலி 2 படத்தின் டிரெய்லர் மார்ச் 16 அன்று வெளிவரவுள்ளது. சமூகவலைத்தளத்தில் நடந்த ஒரு உரையாடலில் பட இயக்குநர் ராஜமெளலியும் தயாரிப்பாளரும் இத்தகவலை வெளியிட்டுள்ளார்கள். அன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உள்ள திரையரங்குகளில் டிரெய்லர் வெளியிடப்படுகிறது. சமூகவலைத்தளத்தில் மார்ச் 16 அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. பாகுபலி 2 - தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.

டிரெய்லர் வெளியிடப்படுவதையொட்டி, படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம்! இபிஎஸ் விளக்கம்

பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா வெளியீட்டுத் தேதி!

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

SCROLL FOR NEXT