செய்திகள்

பாதுகாப்பு இல்லையெனில் இணையத்தில் பகிரவேண்டாம்: பெண்களுக்கு ஐஸ்வர்யா அறிவுரை! (படங்கள்)

எழில்

பாதுகாப்பாக இல்லாத ஒன்றை இணையத்தில் பகிரவேண்டாம் என்று பெண்களுக்கு ஐஸ்வர்யா தனுஷ் அறிவுரை கூறியுள்ளார்.

சிலநாள்களுக்கு முன்பு ஐநா சபையின் மகளின் தின நிகழ்ச்சியில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா பரதநாட்டிய நடனம் ஆடினார். பெண்களின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இந்திய கலாசாரத்தை உலகுக்குப் பறைசாற்றும் வகையிலும் இந்த நடன நிகழ்ச்சி, இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஐநா சபையில் இந்தியத் தூதரகத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடிய முதல் பெண் என்கிற பெருமையை அவர் பெற்றார். தனது பரதநாட்டியக் குழுவினரோடு நடராஜர் புஷ்பாஞ்சலி, வைரமுத்து எழுதிய அவசர தாலாட்டுப் பாடல், உலக அமைதிக்காக மறைந்த இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய பாடல் ஆகியவற்றுக்கு நடனமாடினார். 

இந்நிலையில் பரத நாட்டிய நிகழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்காவில் நடைபெற்ற YouthCSW61 என்கிற பெண்கள் பாதுகாப்பு தொடர்புடைய கருத்தரங்கு ஒன்றில் ஐஸ்வர்யா தனுஷ் கலந்துகொண்டார். அதில் அவர் பேசும்போது, மற்றவர்களின் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணிய வேண்டாம். பாதுகாப்பாக இல்லாததை இணையத்தில் பகிரவேண்டாம் என்று பெண்களுக்கு அறிவுரை கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT