செய்திகள்

வெளியீட்டுக்கு முன்பு வியாபாரத்தில் சாதனை படைத்துள்ள சல்மான் கான் படம்!

பட வெளியீட்டுக்கு முன்பே சல்மான் கான் நடித்து வெளிவரவிருக்கும் படமான டியூப்லைட் சாதனை படைத்துள்ளது.

எழில்

சல்மான் கான் பட வசூல் சாதனை செய்கிறது என்பது இன்றைக்கு ஆச்சர்யமான செய்தியே அல்ல. அடுத்தடுத்து வசூலில் சாதனை படைப்பதே வழக்கமாகிவிட்டது.

இப்போது பட வெளியீட்டுக்கு முன்பே சல்மான் கான் நடித்து வெளிவரவிருக்கும் படமான டியூப்லைட் சாதனை படைத்துள்ளது.

கபிர் கான் இயக்கத்தில் சல்மான் கான், சோஹைல் கான் நடித்துள்ள படம் - டியூப்லைட். படம் வெளிவர இன்னும் 3 மாதங்கள் உள்ளன. ஆனால் அதற்குள் பட வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

மத்திய இந்தியாவின் பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகளில் படத்தின் விநியோக உரிமையை என்.எச் ஸ்டூடியோஸ் நிறுவனம் ரூ. 132 கோடிக்குப் பெற்றுள்ளது. இது ஒரு பாலிவுட் சாதனை. இதற்கு முன்பு ஷாருக் கான், கஜோல் நடித்த தில்வாலே படம் ரூ. 125 கோடிக்கு விற்பனையானதே சாதனையாக இருந்தது. அதனை டியூப்லைட் தாண்டியுள்ளது.

சல்மான் கானின் தந்தை சலிம் கான், மத்திய இந்தியப் பகுதியின் விநியோக உரிமையைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

படத்தின் விநியோக உரிமை நிலவரத்தை வைத்துப் பார்க்கும்போது பட வசூல் ரூ. 250 கோடியைத் தாண்டும்போது விநியோகஸ்தர்கள் லாபம் பார்ப்பார்கள் எனத் தெரிகிறது. ஆனால் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளதால் பட வசூல் எப்படியும் ரூ. 300 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

கருணைத் தொகை ரூ. 10,000 - உதவித் தொகை என பெயர் மாற்றம்!

SCROLL FOR NEXT