செய்திகள்

சுல்தான், டங்கல் படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்த பாகுபலி 2

ஹிந்தியில் டப் செய்யப்பட்ட பாகுபலி 2 படத்துக்கு முதல் மூன்று நாள்களில்...

எழில்

ஹிந்தியில் ஒரு டப்பிங் படம் வசூலில் நம்பமுடியாத சாதனைகளை எல்லாம் செய்யும் என எதிர்பார்க்க முடியுமா? அதுவும் கான்களும் பெரிய பெரிய இயக்குநர்களும் உள்ள ஒரு திரையுலகில்.

முடியும் என்று நிரூபித்துக்காண்பித்துள்ளது பாகுபலி 2. முதல் மூன்று நாள்களின் வசூலில் சுல்தான், டங்கல் பட சாதனைகளைத் தகர்த்துள்ளது.

இதுவரை முதல் மூன்று நாள்களில் அதிக வசூல் பெற்ற படமாக அமீர் கானின் டங்கல் இருந்தது. அது முதல் மூன்று நாள்களில் ரூ. 107 கோடி அள்ளியது. இரண்டாம் இடத்தில் சல்மான் கான் நடித்த சுல்தான் படம் ரூ. 105 கோடி. ஆனால் இந்த இரு சாதனைகளையும் தகர்த்து முதல் இடம் பிடித்துள்ளது பாகுபலி 2.

ஹிந்தியில் டப் செய்யப்பட்ட பாகுபலி 2 படத்துக்கு முதல் மூன்று நாள்களில் ரூ. 128 கோடி கிடைத்துள்ளது. வெள்ளியன்று ரூ. 41 கோடி, சனி ரூ. 40.5, ஞாயிறு ரூ. 46.5 கோடி. இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் ஹிந்தியில் இப்படத்தை வெளியிட்ட கரண் ஜோஹர். 

வருங்காலத்தில் இந்தச் சாதனையும் உடைபடலாம். ஆனால் ஹிந்தியில் டப் செய்யப்பட்ட படமான பாகுபலி 2 இதைச் சாதித்தது உண்மையிலேயே மகத்தான சாதனைதான்.

வட இந்திய ரசிகர்களுக்குத் தென்னிந்தியப் படங்களின் மகத்துவத்தை அறிமுகம் செய்ததோடு மட்டுமல்லாமல் ஒரு படத்தை ஹிந்தியில் டப் செய்து இந்தளவுக்கு வசூலை அள்ளமுடியும் என்கிற ஓர் உதாரணத்தையும் தென்னிந்தியத் திரையுலகுக்கு வழங்கியுள்ளது பாகுபலி 2. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT