செய்திகள்

பாகுபலி 2: தமிழ்நாட்டின் முதல் வார வசூல்!

இது பெரிய நடிகர்களின் வசூலுக்கு நிகரானது...

எழில்

பாகுபலி 2 படத்தின் வசூல் நாளுக்கு நாள் சாதனைகளைப் படைத்துவருகிறது.

தமிழ் பாகுபலி 2, முதல் வாரத்தில் ரூ. 60 கோடி வசூலித்துள்ளது. இது பெரிய நடிகர்களின் வசூலுக்கு நிகரானது என்பது மட்டுமல்லாமல் இரண்டாம் வாரமும் சீரான வசூலை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல கேரளாவில் முதல் வாரத்தில், பாகுபலி 2, ரூ. 32 கோடி வசூலித்துள்ளது. 

இந்தியாவில் பாகுபலி 2, முதல் வாரத்தில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் சேர்த்து ரூ. 534 கோடி வசூலித்துள்ளது. இந்திய அளவில் வேறெந்த படமும் இந்த வசூலைக் கண்டதில்லை. 

அதேபோல ஹிந்தி பாகுபலி 2 முதல் வாரத்தில் ரூ. 247 கோடி வசூலித்துள்ளது. இதற்கு முன்பு சுல்தான் (ரூ. 229 கோடி), டங்கல் (ரூ. 197 கோடி) ஆகிய படங்கள் சாதனை படைத்தன. இதை டப்பிங் படமான பாகுபலி 2 முறியடித்துள்ளது. இது நிச்சயம் மகத்தான சாதனை.

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2, இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT