செய்திகள்

சிஸ்டம் சரியில்லையா? ரஜினியின் புகாருக்கு கமல் பதில்!

எழில்

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா அல்லது வரலாமா கூடாதா என்கிற விவாதங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கமலும் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் இந்த விவகாரம் குறித்து அவர் கூறியதாவது: 

தற்போதைய அரசியலை பார்த்தால் யாருமே அரசியலுக்கு வரக்கூடாது. தமிழ் உணர்வு உள்ள யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம். அரசியல் என்பது சேவை தொடர்புடையது. சம்பாதிக்கும் தொழில் அல்ல. அரசியல்வாதிகளுக்கு அதிகச் சம்பளம் கொடுத்து எங்களுக்குப் பணியாற்ற வாருங்கள் என்று சொல்லவேண்டும். பதிலாக தியாகம் செய்ய வாருங்கள் என்றால் அதை அவர்கள் வேறுவிதமாகப் பயன்படுத்திக்கொள்வார்கள். 

நான் அரசியலுக்கு வரமாட்டேன். நான் வாக்களிப்பவன் மட்டுமே. சிஸ்டம் சரியில்லை என்ற ரஜினியின் கருத்தில் தவறுமில்லை, வித்தியாசமானதுமில்லை. நான் 21 வயதில் இருந்து, ஓட்டு போட்ட நாளில் இருந்து அரசியலில் உள்ளேன். ஆனால் போட்டி அரசியலுக்குள் வரவில்லை என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT