செய்திகள்

பொள்ளாச்சியில் நடிகை அனுஷ்காவின் கேரவன் பறிமுதல்!

முறையான ஆவணங்கள் இல்லாததால் நடிகை அனுஷ்கா பயன்படுத்திய கேரவன் வண்டியைக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

எழில்

முறையான ஆவணங்கள் இல்லாததால் நடிகை அனுஷ்கா பயன்படுத்தி வரும் கேரவன் வண்டியைக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு அனுஷ்கா நடிக்கும் படம் - பாக்மதி (Bhagmati). தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக்கப்படுகிறது. ஜி. அசோக் இயக்கி வரும் இப்படத்தில் ஜெயராம், ஆஷா சரத் போன்றோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - மதி. இசை - தமன். பாகுபலி 2-வின் வெற்றிக்குப் பிறகு இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள பாக்மதி, ஆகஸ்ட் மாதம் வெளிவரவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. இதற்காக பொள்ளாச்சியில் தங்கியுள்ளார் அனுஷ்கா.

இந்நிலையில் நடிகை அனுஷ்கா பயன்படுத்தி வரும் கேரவன் வண்டி படப்பிடிப்பு முடிந்து பொள்ளாச்சி நோக்கி வந்துகொண்டிருந்தபோது அதை வாகனத் தணிக்கை செய்தார்கள் பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகர்கள். அப்போது கேரவனில் உரிய ஆவணங்கள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவ்வாகனத்துக்கு ஒரு லட்சத்துக்கும் மேல் வரிபாக்கி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த கேரவனை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT