செய்திகள்

‘எதுவும் தப்பு இல்லை, எவனும் புத்தனில்லை’ பாடலுக்கு சினேகன் குத்தாட்டம்!

வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படம் ‘எவனும் புத்தனில்லை’.

DIN

வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படம் ‘எவனும் புத்தனில்லை’. நபிநந்தி, ஷரத், நிஹாரிகா, ஸ்வாசிகா, பூனம், வேல ராமமூர்த்தி, சங்கிலி முருகன், மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை விஜய சேகரன் இயக்குகிறார். இப்படத்துக்கு மரியா மனோகர் என்பவர் இசை அமைக்கிறார். 

இப்படத்துக்காக தலைப்புப் பாடலை எழுதிய சினேகன் அதற்கு நடனமும் ஆடிக் கலக்கியுள்ளார். ‘எதுவும் தப்பு இல்லை, எவனும் புத்தனில்லை’என்று தொடங்கும் அந்தப் பாடல் காட்சியில் பூனம் கவுருடன் சேர்ந்து கிட்டத்தட்ட 200 நடனக் கலைஞர்களுடன் சினேகன் ஆடியுள்ளாராம். மலேஷியா மற்றும் சென்னையில் பிரமாண்டமான செட் போடப்பட்டு இப்பாடல் படமாக்கப்பட்டது என்கிறது படக்குழு.  

நடிகர் விஷால் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவரும்‘எவனும் புத்தனில்லை’படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் வரி வீடியோவை வெளியிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளங்குளியில் பனை விதைகள் நடவு

பல லட்சம் பக்தா்களின் அரோகரா கோஷம் முழங்க திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்

போலி பட்டாவை ரத்து செய்யக் கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

பிறவி மருந்தீஸ்வரா் கோயிலில் சூரசம்ஹாரம்

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் விமானவியல் ஆய்வகம்

SCROLL FOR NEXT