செய்திகள்

ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருந்த படத்தில் காஜல் அகர்வாலா?

காஜல் அகர்வால் தற்போது பாலிவுட் ப்ளாக் பஸ்டரான குயின் பட ரீமேக்கில் நடித்துவருகிறார்.

DIN


காஜல் அகர்வால் தற்போது பாலிவுட்டில் பெரும் வெற்றி பெற்ற குயின் பட ரீமேக்கில் நடித்து வருகிறார். இயக்குனர் பி.வாசு இயக்கவிருக்கும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன்னால் வந்தது. அந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகள் முடியாத நிலையில் படப்பிடிப்பு தொடங்கியிருக்கவில்லை.

இன்னும் பெயரிடப்பட்டாத இந்தப் படத்திலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் காஜல்.

இத்திரைப்படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கவுள்ளார் பி.வாசு. படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்ததும் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் தான் கேட்டிருந்தாராம் இயக்குநர் பி.வாசு. ஆனால் ஐஸ்வர்யாவால் அச்சமயத்தில் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை.

சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் காஜலிடம் இந்தக் கதை சொல்லப்பட்ட போது ஆர்வத்துடன் நடிக்க ஒப்புக் கொண்டாராம். இப்படத்துக்காக களறி கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியிருக்கிறாராம் பி.வாசு.

2018-ம் ஆண்டு தொடக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்கிறார்கள். ஆனால் இது குறித்து அதிகாரபூர்வமான செய்தி இதுவரை வரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக். 30-ல் உலகக் கோப்பை செஸ் போட்டி தொடக்கம்!

கடம்பூா், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் அக்.31 முதல் குருவாயூா் விரைவு ரயில் நின்று செல்லும்

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்

வெள்ளங்குளியில் பனை விதைகள் நடவு

SCROLL FOR NEXT