பிக் பாஸ் வெற்றியாளர் ஆரவ் தன்னுடைய பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
இந்தப் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் திரையுலகப் பிரமுகர்கள், பிக் பாஸ் போட்டியாளர்கள் என பலர் கலந்துகொண்டார்கள். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவியாவும் கலந்துகொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கணேஷ் வெங்கட்ராமும் ரைஸாவும் புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய சக போட்டியாளரான ஆரவ்வை நடிகை ஓவியா காதலித்தார். ஆனால் ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்கவில்லை. இதனால் மனத்தளவில் பாதிக்கப்பட்ட ஓவியா, அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். பிறகு, காதல் நிலவரம்: நான் இப்போது சிங்கிளாக உள்ளேன். நிம்மதியாக உள்ளேன் என ட்வீட் செய்தார். இந்நிலையில் ஆரவ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவியா பங்கேற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.