செய்திகள்

விரைவில் வெளிவரவுள்ள கார்த்திக் சுப்புராஜின் மெர்குரி!

பிரபுதேவா நடிப்பில் உருவாகி வந்த தனது அடுத்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்...

எழில்

இறைவி படத்துக்குப் பிறகு பிரபுதேவா நடிப்பில் உருவாகி வந்த தனது அடுத்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

பிரபு தேவா, ரம்யா நம்பீசன், சனந்த், இந்துஜா (மேயாத மான் படத்தில் நடித்தவர்) நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன், பிரதீப் குமார். ஒளிப்பதிவு - திரு.

கமலின் பேசும் படம் போல மெர்குரியும் ஒரு மெளனப் படமாகும். SILENCE IS THE MOST POWERFUL SCREAM என்று இந்தப் படத்தின் விளம்பர வாசகம் கூறுகிறது. வசனமே இல்லாத இந்தப் படத்துக்கு பின்னணி இசை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இறுதிக்கட்டப் பணிகள் நடைபெறுகின்றன என்று பேட்டியளித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து அடுத்தச் சில மாதங்களில் மெர்குரி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT