செய்திகள்

துரோகத்தின் வல்லமையால் சாகடிக்கப்பட்டு விட்டதாக உணர்கிறேன்: இயக்குநர் மீரா கதிரவன் உருக்கம்! 

DIN

சென்னை: இன்று வெளிவருவதாக இருந்த தனது 'விழித்திரு'  படம் வெளிவராத நிலையில் 'துரோகத்தின் வல்லமையால் முழுவதும் சாகடிக்கப்பட்டு விட்டதாகவே உணர்கிறேன்' என்று இயக்குநர் மீரா கதிரவன் தெரிவித்துள்ளார்.

'அவள் பெயர் தமிழரசி' திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் மீரா கதிரவன். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவரது சொந்த தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'விழித்திரு'. இந்த திரைப்படத்தில் விதார்த், கிருஷ்ணா, தன்ஷிகா, அபிநயா மற்றும் தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். அத்துடன் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பேபி சாரா ஆகியோர் கௌரவ வேடத்தில்   நடித்துள்ளனர்.      

கடந்த மாதம் வெளிவருவதாக இருந்த இந்த திரைப்படம் இரட்டை வரி விதிப்பு முறையினை எதிர்த்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்த 'தீடீர்' வேலை நிறுத்தத்தின் காரணமாக தாமதமானது. மிகுந்த போராட்டத்தின் பின்னர் 'விழித்திரு' திரைப்படம் இன்று வெளியாகும் என்று விளம்பரங்கள் வெளிவந்தன. 

இந்நிலையில் அறிவித்தபடி படம் இன்று வெளியாகவில்லை. நேற்று இரவு முதல் பெய்த அடைமழையின் காரணமாக படம் வெளியாகவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் இயக்குநர் மீரா கதிரவன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தற்பொழுது ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த இரண்டு நாட்களாக நொடி உறக்கம் இல்லை.தற்போதும் ஜெமினி லேப் வாசலில் என் ரத்தம் உறிஞ்சப்படுவது தெரிந்தும் தடுக்க முடியாமல் தாங்கி கொண்டிருக்கிறேன். துரோகத்தின் வல்லமையால் முழுவதும் சாகடிக்கப்பட்டு விட்டதாகவே உணர்கிறேன் .ஆனாலும் என் படத்தின் மீதும் மக்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது. முழுவதுமாக கொல்லப்பட்டிருக்கிறேன். நான் மீண்டும் உயிர்ப்பித்து வருவது நீங்கள் அளிக்கப் போகும் ஆதரவில் இருக்கிறது.நண்பர்களும் மக்களும் ஊடகத்துறையினரும் எங்களைக் கைவிட மாட்டீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. சிரமங்களுக்கு மன்னிக்கவும்...விழித்திரு திரையரங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது...ஆதரியுங்கள்..

இவ்வாறு அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து  'விழித்திரு' திரைப்படம் வெகு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

அழகுப் பதுமைகள் அணிவகுப்பு!

நிதமும் உன்னை நினைக்கிறேன், நினைவினாலே அணைக்கிறேன்!

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

SCROLL FOR NEXT