செய்திகள்

தெலுங்கு மெர்சல் இன்று வெளியீடு!

மெர்சல் படத்தின் தெலுங்குப் பதிப்பு - அதிரிந்தி (Adirindhi) முதலில் தீபாவளியன்றும் பிறகு அக்டோபர் 27 அன்றும் வெளிவருவதாக இருந்தது...

எழில்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் - மெர்சல். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள்.

மெர்சல் படத்தில் மருத்துவர்களைப் பற்றி உண்மையற்ற, மலிவான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக மருத்துவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்தது. இதனால் பெரும் சர்ச்சை உருவானது. எனினும், மெர்சல் படத்தின் வசூல் ரூ. 225 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மெர்சல் படத்தின் தெலுங்குப் பதிப்பு - அதிரிந்தி (Adirindhi) முதலில் தீபாவளியன்றும் பிறகு அக்டோபர் 27 அன்றும் வெளிவருவதாக இருந்தது. ஆனால் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் வெளியீடு தள்ளிப் போனது. இந்நிலையில், கடந்த 2-ம் தேதி, அதிரிந்தி படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்தது. 

இதையடுத்து, இன்று அதிரிந்தி படம் ஆந்திரா, தெலங்கானா மற்றும் தெலுங்கு மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இன்று வெளியாகியுள்ளது. தமிழில் அதிக வசூலைப் பெற்றதால், தெலுங்கிலும் நல்ல வசூலைப் பெறும் என்கிற நம்பிக்கை உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு! வெளியுறவு அமைச்சகம்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி!

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

SCROLL FOR NEXT