செய்திகள்

நடிகர் சிம்புவுக்கு போலீஸ் பாதுகாப்பு!

சென்னை தியாகராய நகரில் உள்ள சிம்புவின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை தியாகராய நகரில் உள்ள சிம்புவின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். பாலமுரளி (எ) பாலு இசையமைத்துள்ளார். 3 நிமிடம் 4 விநாடிகள் ஓடும் வகையில் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

பண மதிப்பு இழப்புக்கு எதிரான இந்தப் பாடல் சமூக ஊடகங்களில் மிகவும் பரபரப்பாக கடந்த சில நாள்களாக பரவி வருகிறது. இந்நிலையில் இப்பாடலுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே சென்னை தியாகராயநகர் மாசிலாமணி தெருவில் உள்ள நடிகர் சிம்புவின் வீட்டை பாரதிய ஜனதா கட்சியினர் சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தகவல் பரவியது. அதையடுத்து சிம்புவின் வீட்டுக்கு பலத்தப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. பிரச்னை நீடிக்கிறது என்பதால் போலீஸ் பாதுகாப்பும் தொடர்கிறது. 

கடந்த வருடம் பீப் சாங் பிரச்னையில் சிக்கி சில நாட்கள் சிம்பு தலைமறைவாக இருந்தது நினைவிருக்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: புதுக்கோட்டையில் 12.98 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

SCROLL FOR NEXT