செய்திகள்

அமேஸான் பிரைம் வசம் சென்ற 2.0 பட டிஜிடல் உரிமம்!

எழில்

வீடியோ ஸ்ட்ரீமிங் மூலமாகப் படம் பார்க்க வசதியை ஏற்படுத்தித் தரும் அமேஸான் பிரைம், ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.0 படத்தின் டிஜிடல் உரிமத்தைப் பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளின் உரிமமும் அமேஸானுக்குச் சென்றுள்ளன. டெஸ்க்டாப் கணினி, ஸ்மார்ட்போன், டேப்ளெட் பிசி போன்றவற்றில் அமேஸான் பிரைம் வழியாகப் படம் பார்க்கமுடியும்.

தீரன் அதிகாரம் ஒன்று, துப்பறிவாளன், கபாலி, தெறி, வேலை இல்லா பட்டதாரி 2, சி 3, மாநகரம், துருவங்கள் பதினாறு, காற்று வெளியிடை, காஷ்மோரா, ஜோக்கர் போன்ற படங்களின் டிஜிடல் உரிமத்தைப் பெற்றுள்ள அமேஸான் பிரைம், தற்போது 2.0 படத்தையும் பெற்று கவனம் ஈர்த்துள்ளது. பொதுவாக, படம் வெளியான 45 நாள்கள் கழித்து அமேஸான் பிரைமில் படங்கள் வெளியாகும். தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் அமேஸான் பிரைமில் படம் வெளியான 25 நாள்களில் வெளியிடப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்து பாராட்டுகளைப் பெற்றார். 

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் - ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருவதால் இதன் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்றன.

2.0 படம் ஜனவரி 25 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டாலும் அதன் வெளியீடு ஏப்ரலுக்குத் தள்ளிப்போகலாம் என்றும் சொல்லப்படுகிறது. 

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான பாகுபலி 2 படத்தை ரூ. 22.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது நெட்ஃபிளிக்ஸ். இதனால் மற்றொரு பிரமாண்டமான படமான 2.0 படத்தின் உரிமத்தைப் பெற பலத்த போட்டி உருவான நிலையில், அமேஸான் பிரைம் அப்படத்தின் உரிமத்தைப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT