செய்திகள்

மோடி, இவான்கா டிரம்ப்பை வரவேற்கும் விஜய் ஆண்டனி பட விளம்பரம்!

எழில்

தெலங்கானா தலைநகர் ஹைதராபாதில் இன்று தொடங்கும் சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், 127 நாடுகளைச் சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட இளம் தொழில்முனைவோர்கள் கலந்துகொள்கின்றனர். அவர்களைத் தவிர, சுமார் 300 முதலீட்டாளர்களும் மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து நடத்துவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் 38 மாகாணங்களைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள், இந்திய-அமெரிக்கர்கள் என சுமார் 350 பேர் அடங்கிய குழு இந்த மாநாட்டில் பங்கேற்கிறது. இந்தக் குழுவுக்கு, டொனால்ட் டிரம்ப்பின் ஆலோசகராக பதவி வகிக்கும் இவான்கா டிரம்ப் தலைமை வகிக்கிறார். 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்தபோது, சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா வருமாறு இவான்கா டிரம்புக்கு நேரடியாக அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவான்கா டிரம்ப்பும் பங்கேற்கின்றனர்.

விஜய் ஆண்டனி, டயனா, மஹிமா ராதா ரவி நடிப்பில் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - அண்ணா துரை. தயாரிப்பு - ராதிகா சரத்குமார் & ஃபாத்திமா விஜய் ஆண்டனி. வரும் நவம்பர் 30 அன்று இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவருகிறது. அண்ணாதுரை, தெலுங்கில் இந்திரசேனா என்கிற பெயரில் வெளியாகிறது.

இந்நிலையில் சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டை முன்னிட்டு ஹைதராபாத்துக்கு வருகை தரும் மோடி மற்றும் இவான்கா டிரம்ப்பை வரவேற்று இந்திரசேனா படத்தின் விளம்பரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இது ரசிகர்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT