முத்தையா இயக்கத்தில் சசிகுமார், மஹிமா நம்பியார், சனுஷா, விதார்த், பூர்ணா, பால சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் - கொடிவீரன். இசை - ரகுநந்தன். சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப் படம் நவம்பர் 30 அன்று வெளிவருவதாக இருந்தது. ஆனால் சசிகுமாரின் உறவினர் அசோக் குமாரின் தற்கொலை மற்றும் பணப்பிரச்னை காரணமாக படம் குறித்த நேரத்தில் வெளியாவது தடைபட்டது.
இதையடுத்து டிசம்பர் 7 அன்று கொடிவீரன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.