ராஜீவ் மேனனின் சர்வம் தாளமயம்: முதல் தோற்ற போஸ்டர் வெளியீடு!
ராஜீவ் மேனின் முதலிரண்டு படங்களிலும் அனைத்து பாடல்களையும் வைரமுத்துதான் எழுதினார்....
இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் சர்வம் தாளமயம் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
இதனையொட்டி படத்தின் முதல் தோற்ற போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, அருண் ராஜா ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளார்கள். ராஜீவ் மேனின் முதலிரண்டு படங்களிலும் அனைத்து பாடல்களையும் வைரமுத்துதான் எழுதினார். ஆனால் இப்படத்தில் வைரமுத்து ஒரு பாடலும் எழுதவில்லை.