முகப்பு
செய்திகள்

மலையாள நடிகர் கலாபவன் அபி காலமானார்!

உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கிகிச்சை பலனின்றி..

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

மலையாள நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கலாபவன் அபி இன்று காலமானார். அவருக்கு வயது 52.

உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு சுனிலா என்கிற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளார்கள். 

Mazhavil Koodaram, Kireedamillatha Rajakkanmar, Mimics Action 500, Aniyathipraavu உள்ளிட்ட 50 படங்களில் நடித்துள்ள அபி, மிமிக்ரி திறமையால் கேரள மக்களிடையே மிகவும் புகழ்பெற்றிருந்தார். அமிதாப் பச்சன் இடம்பெறும் மலையாள விளம்பரங்களில் அவருக்குக் குரல் கொடுத்தவர் அபி. 

இவருடைய மறைவுக்கு மலையாளத் திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.