முகப்பு
செய்திகள்

நடிகை சமந்தா திருமணமும் பிரபல விருந்தினர்களும்! (புகைப்படங்கள்)

இத்திருமணத்தில் கலந்துகொண்ட திரையுலகப் பிரபலங்கள், மணமக்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை...

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:49 PM
பகிர்:

பிரபல நடிகை சமந்தாவுக்கு கோவாவில் திருமணம் நடைபெற்றுள்ளது. பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மகனும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை அவர் மணந்துள்ளார். கோவாவில் உள்ள டபிள்யூ என்கிற நட்சத்திர விடுதியில் நள்ளிரவில் ஹிந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் சமந்தா - நாக சைதன்யா ஆகியோரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். இத்திருமணத்தில் கலந்துகொண்ட திரையுலகப் பிரபலங்கள், மணமக்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்கள்.

இன்று மாலை 5.30 மணிக்கு சமந்தா - நாக சைதன்யா ஆகிய இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெறவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →