செய்திகள்

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்!

மேற்சொல்லப்பட்டது ஒரு கட்டுரையின் தலைப்பல்ல. ஒரு படத்தின் தலைப்பு. அந்த தலைப்பை

DIN

மேற்சொல்லப்பட்டது ஒரு கட்டுரையின் தலைப்பல்ல. ஒரு படத்தின் தலைப்பு. அந்த தலைப்பை படத்தின் பெயராகத் தேர்ந்தெடுத்தவர் நடிகர் சத்யராஜ்.

இப்படத்தின் இயக்குனர் சர்ஜுன்.கே.எம் இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். சில மாதங்களுக்கு முன்னால் தனது முதல் படத்தின் கதையுடன் நடிகர் சத்யராஜை அணுகியபோது கதையை ரசித்த சத்யராஜ், 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என டைட்டில் வைத்தால் இந்தக் கதைக்கு நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

'அந்தத் தலைப்பு கதைக்கு பொருத்தமாக இருக்கவே, அதையே வைத்து விட்டோம். இந்தப் படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் டான்ஸராக நடிக்கவிருக்கிறார். படத்தில் அவருடைய கதாபாத்திரம் வித்தியாசமானது என்பதால் எடை குறைப்பு செய்துள்ளார். சத்தியராஜும் கணிசமாக எடையைக் குறைத்து நடித்துள்ளார்’ என்றார் இயக்குனர்.

கதையைப் பற்றிக் கூறுகையில், 'ஒரு குழந்தை, தன் தாத்தாவுக்கு கதை சொல்லும்விதமாக அமைக்கப்பட்டுள்ளது இக்கதைக்களம். பணம், பேராசை மற்றும் காதல் இவற்றை மையமாக கொண்ட த்ரில்லர் கதை இது. இதில் இரண்டு இணை கதைகள் ஒரே கட்டத்தை நோக்கி நகரும். அதில் ஒன்று ஒரு குற்றத்தை பற்றியும், மற்றொன்று குற்றம் செய்தவர்களை தேடுபவரை பற்றியதாகும். இந்தக் கதாபாத்திரங்களின் பின்கதையே இவர்களை கதையில் வழிநடத்தி செல்வது சிறப்பம்சம். மேலும் ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்புதான் இவை’ என்றார் இயக்குனர் சர்ஜுன்.

டைம் லைன் சினிமாஸ் சார்பாக சி.பி.கணேசன், சுந்தர் அண்ணாமலை ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கிஷோர், யோகி பாபு, ஜெயகுமார், விவேக் ராஜகோபல் ஆகியோர் நடிக்கின்றனர். இசை - சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு - சுதர்ஷன் ஸ்ரீனிவாசன், படத்தொகுப்பு - கார்த்திக் ஜோகேஷ், ஸ்டண்ட் - மிராக்கிள் மைக்கேல்.

சென்னை மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிஎஸ்டி 2.0: மாநில நிதியமைச்சா்களிடம் நிா்மலா சீதாராமன் விளக்கம்

பதவிப் பறிப்பு மசோதா மக்களாட்சியின் வேரில் வெந்நீா் ஊற்றும் செயல் -முதல்வா் ஸ்டாலின்

பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

பெண் தொழிலாளா்களுக்கு சம ஊதியம் வழங்கக் கோரிக்கை

நாகை-தூத்துக்குடி பசுமைச் சாலை: திட்ட அறிக்கைக்கான ஒப்பந்தப்புள்ளி கோரல்

SCROLL FOR NEXT