செய்திகள்

பாலிவுட்டுக்கு ஏற்றுமதியாகிறது கோலிவுட் ஜிகிர்தண்டா!

அஜய் தேவ்கான் தயாரிப்பில், தமிழில் சித்தார்த் நடித்த கதாபாத்திரத்தில் பர்ஹான்

DIN

அஜய் தேவ்கான் தயாரிப்பில், தமிழில் சித்தார்த் நடித்த கதாபாத்திரத்தில் பர்ஹான் அக்தர் நடிக்க 'ஜிகர்தண்டா' இந்தியில் ரீமேக்காக உள்ளது. மலையாளத்தில் யதார்த்த நடிப்புக்கும் இயல்பான முக பாவங்களுக்கும் பெயர் பெற்ற ஃபகத் பாசில். தமிழில் அந்த இடத்தில் இருப்பவர் விஜய் சேதுபதி. போலவே இந்தியில் அலட்டாத நடிப்புக்குச் சொந்தக்காரர் பர்ஹான் அக்தர். ஜிகிர்தண்டாவில் சித்தார்த் ஏற்று நடித்துள்ள சினிமா இயக்குனர் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்தக் கூடியவர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்தத் தமிழ்ப் படம் டார்க் ஹ்யூமர் ஜானரில் எடுக்கப்பட்டது. ஜிகிர்தண்டாவின் கன்னட ரீமேக் உரிமையை சுதீப் பெற்றிருந்தார். தற்போது இதன் இந்தி ரீமேக் முடிவாகியுள்ளது. மராத்தி, இந்தி, தமிழ் படங்களை இயக்கியுள்ள நிஷிகாந்த் காமத் இப்படத்தை இயக்கவிருக்கிறார். தமிழில் வெளியான எவனோ ஒருவன் படத்தை இயக்கியவரும், த்ருஷ்யம் படத்தை இந்தியில் இயக்கியவர் நிஷிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
  

இந்தப் படத்தின் இன்னொரு பிரதான பாத்திரமான பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிக்கிறார். தமிழ்ப் படத்தில் மதுரை கதைக்களனாக இருந்தது. இந்தியில் மகாராஷ்ட்ராவில் கதை நடக்கும். தற்போது படத்தின் காஸ்டிங் மும்முரமாக நடந்து வருகிறது, 2018-ம் ஆண்டின் தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT