செய்திகள்

மெர்சல் பட விவகாரம்: தேவைப்பட்டால் அகற்றத் தயார்: தயாரிப்பு நிறுவனம்

DIN

"மெர்சல்' படத்தில் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்துகளைத் தேவைப்பட்டால் அகற்றத் தயார் எனத் திரைப்படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் "மெர்சல்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.
இந்நிலையில் "மெர்சல்' படத்தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் சனிக்கிழமை (அக்.21) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திரைப்படம் வெளிவரும் முன்பாகவே "மெர்சல்' படம் குறித்த பல சர்ச்சைகள் எழுந்தன. 
இப்படத்தின் பின்னணியில் பல கோடி ரூபாய் முதலீடும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் ஓராண்டு கால உழைப்பும் அடங்கியுள்ளது.
யாருக்கும் எதிரானது 
அல்ல...மெர்சல் திரைப்படம் வெளியான சில தினங்களில் மீண்டும் சர்ச்சைகளுக்கு உள்ளானது எங்களை மிகுந்த மன வேதனையடையச் செய்கிறது. படம் யாருக்கும் எதிரானது அல்ல. அரசுக்கு எதிரான கருத்துகளைச் சொல்லும் படமும் அல்ல. சாமானிய மனிதர்களுக்கும் தரமான மருத்துவம் கிடைக்க வேண்டும் என்கிற ஒரு மருத்துவனின் கனவுதான் படத்தின் கரு. 
நல்ல பொழுதுபோக்கு சித்திரங்களைத் தந்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பது மட்டுமே எங்களது நிறுவனத்தின் நோக்கம். எங்கள் தயாரிப்புகளால் யாரும் மன வருத்தமடைந்திருந்தால் அதை என்னுடைய சொந்த வருத்தமாகவே நான் கருதுகிறேன்.
நேரில் சந்தித்து விளக்கம் அளித்தோம்: சர்ச்சைகள் குறித்து பாஜகவின் மூத்த முக்கியத் தலைவர்களை நேரில் சந்தித்தும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் எங்கள் படைப்பின் நோக்கம், நிலை குறித்தும் இந்த திரைப்படம் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் தயாரிக்கப்படவில்லை என்றும் விளக்கமளித்தோம். அவர்களும் எங்கள் விளக்கத்தைப் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டனர்.
நாங்கள் சந்திக்கும் போது பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்பட அனைவரும், அவர்களை நேரில் சந்திக்க முடிவெடுத்த எங்கள் நேர்மையான அணுகுமுறையைப் பாராட்டினர். அவர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்துகளை அகற்றத் தயார்: அவர்கள் பார்வையில் எதிர்ப்பு நியாயமாகவே உள்ளது. எதைப்பற்றியும் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்துகள் அகற்றப்பட வேண்டுமென்றால் அதற்கும் தயாராகவே இருக்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT