செய்திகள்

திருட்டுப் பயலே ரிலீஸ் தேதி இதுதான்!

DIN

சுசி கணேசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'திருட்டுப்பயலே-2'. வித்யாசாகர் இசை அமைத்துள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் அமலா பால் அதிகளவு க்ளாமராக நடித்துள்ளது படத்தின் போஸ்டர்களில் தெரிகிறது. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பில் உள்ள இப்படம் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராக இருந்தது. 'நவம்பர் முதல் வாரத்தில் 'திருட்டுப்பயலே 2' வெளியாகும்' என தயாரிப்பாளரும் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார். ஆனால் நவம்பரில் வேறு சில படங்கள் வெளி வர உள்ளதால் திருட்டுப் பயலே 2 வின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது டிசம்பர் 1-ம் தேதி வெளியீடு என படக்குழுவினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT