செய்திகள்

அமிதாப் பச்சனை சந்தித்த மிதாலி ராஜ் பிரமிப்பு!

இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், 'கோன் பனேகா க்ரோர்பதி 9’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

IANS

மும்பை, ஆக. 31: இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் சமீபத்தில் 'கோன் பனேகா க்ரோர்பதி 9’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த ரியாலிட்டி டி.வி நிகழ்ச்சியில் மெகாஸ்டர் அமிதாப் பச்சனைச் சந்தித்தபோது மிகவும் வியப்பும் பிரமிப்பும் அடைந்ததாகக் கூறினார்.

'அமிதாப்ஜியுடனான அந்தச் சந்திப்பு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது! படப்பிடிப்பில் அவரைச் சந்தித்து ஒருசில மணி நேரம் செலவழிக்கப் போகிறேன் என்று எனக்கு முன்பே தெரிந்திருந்தாலும், அவரை நேருக்கு நேராகப் பார்த்தபோது எனக்கு பிரமிப்பாக இருந்தது. யாராக இருந்தாலும் அப்படிப்பட்ட உணர்வுநிலையை அடைவார்கள் என்பது நிச்சயம். அவருடைய வசீகரமும் பழகும் தன்மையும் அத்தகையது’ என்று கூறினார்.

சோனி என்டர்டெயின்மன்ட் டெலிவிஷனில் இந்நிகழ்ச்சியில் அவருடன் ஹர்மன் பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தானா, பூனம் ரவாட், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஜுலன் கோஸ்வாமி மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோரும்  பங்குபெற்றனர்.

ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் ஹாட் சீட் எனப்படும் போட்டி இருக்கையில் அமர்ந்து அமிதாப்ஜியுடன் க்ரோர்பதி விளையாட்டு விளையாட ஒரு வாய்ப்பு கிடைத்தது. இறுதியில் வெற்றி பெற்ற பணத்தை ஹைதராபாத்திலுள்ள சமூக மேம்பாட்டு நிறுவனமான பிரயாஸுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்ட 'கோன் பனேகா க்ரோர்பதி 9’ இன்று (வெள்ளிக்கிழமை) ஒளிபரப்பப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 4

மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான மாநில விருது!

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

SCROLL FOR NEXT