முகப்பு
செய்திகள்

நீங்க ரெடியா? வெள்ளியன்று 5 தமிழ்ப் படங்கள் வெளியீடு!

இந்த மாதத்தின் ஒவ்வொரு வாரத்திலும் ஏராளமான படங்கள் வெளிவரவுள்ளன...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

இந்த மாதத்தின் ஒவ்வொரு வாரத்திலும் ஏராளமான படங்கள் வெளிவரவுள்ளன. அதன் முதல்கட்டமாக இந்த வாரம் வெள்ளியன்று 5 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

1. நெருப்புடா 2. கதாநாயகன், 3. தப்புதண்டா, 4. காதல் கசக்குதய்யா, 5. ஆறாம் வேற்றுமை

இந்த 5 படங்களில் விக்ரம் பிரபு நடித்துள்ள நெருப்புடா, விஷ்ணு விஷால் நடித்துள்ள கதாநாயகன் ஆகிய இரு படங்களும் முதல் நாளன்று மற்ற படங்களை விடவும் நல்ல வசூல் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதுமுகம் அசோக் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள நெருப்புடா படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடித்துள்ளார். கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தப் படத்தை ஃபர்ஸ்ட் ஆர்டிஸ்ட் என்கிற பெயரில் விக்ரம் பிரபு தயாரித்துள்ளார்.

முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால், கேத்ரீன் தெரசா, சூரி போன்றோர் நடித்துள்ள படம் - கதாநாயகன். இப்படத்தில் விஜய் சேதுபதி கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். விஷ்ணு விஷால் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ நிறுவனம் பெற்றுள்ளது. தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.