முகப்பு
செய்திகள்

100 டிகிரி செல்சியஸ் ரீமேக்கிலிருந்து விலகினார் நடிகை ராய் லட்சுமி!

ஜூலி 2 பட டிரெய்லருக்குப் பிறகு நடிகை ராய் லட்சுமி மீதான கவனம் அதிகரித்துள்ளது...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

ஜூலி 2 பட டிரெய்லருக்குப் பிறகு நடிகை ராய் லட்சுமி மீதான கவனம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் செளகார்பேட்டை படத்துக்குப் பிறகு அவர் ஒப்புக்கொண்ட தமிழ்ப் படம் - மலையாளப் படமான 100 டிகிரி செல்சியஸ் ரீமேக். ஆனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டதால் அப்படத்திலிருந்து விலகியுள்ளார் ராய் லட்சுமி. 

கதாநாயகியை மையமாகக் கொண்ட படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தேன். அப்படத்தின் கதையும் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், படப்பிடிப்பு ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டதால் வேறு வழியின்றி விலகியுள்ளேன் என ராய் லட்சுமி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.