செய்திகள்

மஞ்சிமா மோகன் எதிர்ப்பார்க்கும் படம்!

DIN

கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் 'இப்படை வெல்லும்' படத்தில் அவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார்.

'அச்சம் என்பது மடமையடா' படத்துக்குப் பின் பெரிய வெற்றிகள் எதுவும் இல்லாத நிலையில் மஞ்சிமா மோகன் இத்திரைப்படத்தை பெரிதும் எதிர்ப்பார்க்கிறாராம். விக்ரம் பிரபுவுடன் நடித்த சத்ரியன் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்தடுத்த படங்களைச் சரியாகத் தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்துள்ளார். அஜித் விஜய் இருவரில் யாருடன் நடிக்க விருப்பம் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டபோது, ஒருநொடி யோசித்துவிட்டு அஜித் மீது தனக்கு பெரிய மரியாதை இருப்பதாகச் சொல்லிவிட்டு, விஜயுடன் நடிக்க ஆசைப்படுவதாகச் சொன்னார் மஞ்சிமா. 

சமூகப் பிரச்னையை பின்னணியாகக் கொண்ட ஆக்‌ஷன் த்ரில்லர் வகைப் படமான இதில் ஹீரோவும் வில்லனும் டாம் அண்ட் ஜெர்ரி போல ஒருவரைத் தேடி மற்றொருவர் பூனை எலி விளையாட்டை விளையாடுவார்கள்.  உதயநிதி மஞ்சிமா இருவரும் சாஃப்ட்வேர் இன்ஜினியராக இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு இசை - டி.இமான். இந்தப் படத்தில் ஒரு பாடலை விஜய்சேதுபதி பாடியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT