செய்திகள்

மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு நடிகர் விஜய் ஆறுதல்: ரூ. 1லட்சம் நிதியுதவி

நீட் தேர்வால் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தினரை, நடிகர் விஜய் திங்கள்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

DIN

நீட் தேர்வால் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தினரை, நடிகர் விஜய் திங்கள்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகள் அனிதா (17). நீட் தேர்வால் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத விரக்தியில் கடந்த 1 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பல்வேறு அரசியல் கட்சியினர், திரைப்பட நடிகர்கள் உள்ளிட்டோர் அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை 8 மணிக்கு அனிதா வீட்டுக்குச் சென்ற நடிகர் விஜய், அனிதாவின் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

பிறகு, அனிதாவின் தந்தை சண்முகம் மற்றும் அவரது சகோதரர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சஸ்பென்ஸ் உள்ளே... சைத்ரா ஆச்சார்!

பூவே உனக்காக... சித்ராங்தா சிங்!

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை! -இந்திய ராணுவம்

மாய கண்கள்... பிரியங்கா ஆச்சார்!

மஞ்சள் மோகினி... டெல்னா டேவிஸ்!

SCROLL FOR NEXT