செய்திகள்

கெளதம் மேனனின் அடுத்த படத்தில் அருண் விஜய்?

DIN

சில தினங்களுக்கு முன்னால் அருண் விஜய் டிவிட்டரில் உடற்பயிற்சி செய்யும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ‘உருமாற்றம் ஆரம்பம், விரைவில் அவி25’ (Transformation begins!!! Announcement on #AV25 soon) என்று பதிவிட்டிருந்தார். கஷ்டமான சில ஆப்ஸ் பயிற்சிகளை செய்வது போன்ற ஒரு வீடியோ காட்சியையும் பகிர்ந்திருந்தார். தனது 25 படத்தைப் பற்றிய குறிப்பைத் தான் அவர் மறைமுகமாகச் சொல்லியிருந்தார் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் அந்தப் படத்தின் இயக்குனர் யார், எப்போது படப்பிடிப்பு போன்ற விபரங்களை அருண் விஜய் தெரிவித்திருக்கவில்லை. ஆனால் கெளதம் மேனனின் படத்தில் அவர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கெளதம் மேனனின் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு எதிராக வில்லனாக நடித்திருந்தார் அருண் விஜய். வில்லனாக நடித்திருந்தாலும் அப்படத்தில் அவர் கதாபாத்திரம் கவனம் பெற்றது. அச்சமயத்தில் அருண் விஜயை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்குவேன் என்று கௌதம் மேனன் கூறியிருந்தார். நிகழ்ச்சியொன்றிலும் இதுகுறித்து கௌதம் மேனன் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அருண் விஜய் கெளதம் மேனனுடன் இணைய பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தன. 

விக்ரம் நடிப்பில் 'துருவ நட்சத்திரம்' மற்றும் தனுஷ் நடிப்பில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய இரண்டு படங்களை கௌதம் மேனன் இயக்கி வருகிறார். அதற்குப் பிறகு அருண் விஜய்யை கௌதம் மேனன் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் 'தடம்' படத்திலும், பிரபாஸுடன் பன்மொழிப் படமான சாஹூவிலும் அருண் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார். கெளதம் மேனன் வட்டாரம் இதுவரை இந்தப் புதிய படம் பற்றி அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT