முகப்பு
செய்திகள்

கட்டுப்பாடுகளை மீறி இணையத்தில் வெளியான துப்பறிவாளன் படம்!

துப்பறிவாளன் படம் இணையத்தளங்களில் வெளியாகாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார் விஷால்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:54 PM
பகிர்:

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள துப்பறிவாளன் படத்தில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா போன்றோர் நடித்துள்ளார்கள். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் நந்தகோபால் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள். அரோல் கொரேலி இசையமைத்துள்ளார். தணிக்கையில் யு/எ பெற்ற இப்படம் கடந்த வியாழன்று வெளியானது. 

துப்பறிவாளன் படம் இணையத்தளங்களில் வெளியாகாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார் விஷால். திருட்டு டிவிடிக்காகப் படம் பிடிப்பதைத் தடுக்க ரசிகர்களைக் கொண்டு பறக்கும் படையை அமைத்திருந்தார். ஆனாலும் படம் வெளியான 11 மணி நேரத்தில் துப்பறிவாளன் படம் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் ஆகிய இரு இணையத்தளங்களிலும் வெளியானது. தமிழ் கன் நிர்வாகி இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட நிலையில் அதே இணையத்தளத்தில் துப்பறிவாளன் படம் வெளியானது. நிர்வாகி கைதான பிறகும் படம் இணையத்தளத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது.

இதையடுத்து தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையத்தளங்களின் நிர்வாகிகளின் புகைப்படங்களைத் தயாரிப்பாளர் சங்கம் இன்று வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.