செய்திகள்

‘லைவ் சாட்’ எப்போது?: ரசிகர்களுக்கு நடிகை ஓவியா தகவல்!

ரசிகர்களுடன் ட்விட்டரில் லைவ் சாட்டில் ஈடுபடுமாறு பல கோரிக்கைகள் வந்துள்ளன...

எழில்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக அதிகக் கவனம் பெற்றுள்ள நடிகை ஓவியா, சமீபத்தில் ட்விட்டரில் தெரிவித்ததாவது:

ரசிகர்களுடன் ட்விட்டரில் லைவ் சாட்டில் ஈடுபடுமாறு பல கோரிக்கைகள் வந்துள்ளன. உங்களைப் போலவே நானும் அதில் ஈடுபட ஆர்வமாகவே உள்ளேன். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100 நாள்கள் முடிந்தபிறகு ரசிகர்களுடன் லைட் சாட் செய்கிறேன் என்று உறுதியளித்துள்ளார். 

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் அதிக வரவேற்பைப் பெற்றவர் நடிகை ஓவியா. அவருடைய குணாதிசயங்களுக்கும் துணிச்சலான பேச்சுக்கும் அதிகப் பாராட்டுகள் கிடைத்தன. சமூகவலைத்தளங்களில் ஓவியாவின் ரசிகர்கள் ஓவியாவுக்கு ஆதரவாக மட்டுமல்லாமல் காயத்ரி ராகுராம், நமீதா, ஜூலி, சக்தி ஆகியோருக்கு எதிராகவும் ஏராளமான பதிவுகளை எழுதினார்கள். சேவ் ஓவியா, ஓவியா ஆர்மி போன்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமாகின. தமிழ்த் திரையுலகினரும் சமூகவலைத்தளம் வழியாக ஓவியாவுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உணவகத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

‘இண்டி’ கூட்டணி காலத்தின் தேவை: தொல்.திருமாவளவன்

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: பிப். 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

வரும் பேரவைத் தோ்தலில் நானும் போட்டி: சீமான் அறிவிப்பு

இணையவழி வா்த்தகம் எனக் கூறி ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் ரூ. 16 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT