செய்திகள்

நடிகை தமன்னாவுக்கு ஸ்ரீதேவி விருது!

நடிகை தமன்னா பாலிவுட் மட்டும் தென்னிந்திய திரை உலகில் நடித்து வருகிறார். இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை

உமாகல்யாணி

நடிகை தமன்னா பாலிவுட் மட்டும் தென்னிந்திய திரை உலகில் நடித்து வருகிறார். இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை கெளரவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஜீ அப்ஸரா விருதுக்கு தமன்னா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் துபையில் ஹோட்டலில் மரணம் அடைந்தார். சினிமாவில் சாதனை செய்து வரும் நடிகை (deserving woman achiever) என்ற பிரிவில் இன்று (8.4.2018) நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் இவ்விருது தமன்னாவுக்கு வழங்கப்பட்டது.

இது குறித்து தமன்னா கூறுகையில், ‘நான் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய காலத்தில் நான் பெரிதும் வியந்த நடிகை ஸ்ரீதேவி. இன்று அவர் பெயரில் வழங்கப்படும் இந்த விருதை பெறுவதில் பெருமை அடைகிறேன். ஸ்ரீதேவியைப் போல நானும் மிகவும் இளம் வயதிலேயே படங்களில் நடிக்க வந்தவள். சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பெறுவதற்கு நீண்ட கால உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை என்பதை நான் புரிந்து கொண்டேன்’ என்றார் தமன்னா.

தற்போது, நா நுவே, க்வீன் ஒன்ஸ் அகெய்ன் மற்றும் கண்ணே கலைமானே ஆகிய படங்களில் தமன்னா நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT