செய்திகள்

தீவிரமடையும் திரைத்துறை அறவழிப்போராட்டம்: ரஜினி, கமல், விஜய் விக்ரம் பங்கேற்பு

Raghavendran

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ் திரையுலகினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை (8-ஆம் தேதி) தமிழ்த் திரையுலகம் சார்பில் கண்டன அறவழிப் போராட்டம் நடக்கிறது. இதில் அனைத்து நடிகர் மற்றும் நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் நடிகர் விஜய் முதல் ஆளாக கலந்துகொண்டார். மேலும் நடிகர்கள் விஷால், சூர்யா, கார்த்தி, சிவகுமார், தனுஷ், விக்ரம், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, பொன்வண்ணன், பார்த்திபன் உள்ளிட்ட பல நடிகர்களும், ரேகா, தன்ஷிகா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டுள்ளனர்.  

மேலும், இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து, மதன் கார்க்கி உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

இப்போராட்டத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசியதாவது: 

மக்களை பாதிக்கும் பிரச்னை என்றால் அதற்கு அரசுகள் தீர்வு காணவேண்டும். திரையுலகம் பிரச்சினையில் சிக்கிக்கொண்டிருக்கும் வேளையிலும், மக்களுக்காக போராடுவது முக்கியம் என கருதியதால் போராட்டம் நடத்துகிறோம். காவிரி மற்றும் ஸ்டெர்லைட்டுக்காக போராட்டம் நடத்துவது நமது கடமை. மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பதாலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிலையில், நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் பகல் 11 மணியளவில் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இதனால் இந்த அறவழிப்போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இருப்பினும், நடிகர் அஜித் இதுவரை இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT