முகப்பு
செய்திகள்

மாம் படத்தில் நடித்த ஸ்ரீதேவிக்குச் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பு!

நடிகை ஸ்ரீதேவி, உறவினரின் திருமணத்தில் பங்கேற்க துபை சென்றபோது, குளியல் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:44 PM
பகிர்:

65-வது திரைப்படத் தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

மாம் படத்தில் நடித்த ஸ்ரீதேவி, சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டார்.

நடிகை ஸ்ரீதேவியின் 300-வது படம் - மாம். 2017ம் வருடம் அவருடைய திரையுலக வாழ்வின் 50-வது வருடம். 1967-ம் வருடம் ஜூலை 7-ம் தேதி துணைவன் படத்தில் ஸ்ரீதேவி அறிமுகமானார். அதே தினத்தில் மாம் படமும் வெளியானது. 

ரவி உத்யவார் இயக்கத்தில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் வெளியான படம் - மாம். ஹிந்தியில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த நான்குப் பதிப்பிலும் சொந்தக் குரலில் பேசினார் ஸ்ரீதேவி.

நடிகை ஸ்ரீதேவி, உறவினரின் திருமணத்தில் பங்கேற்க துபை சென்றபோது, குளியல் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி துபையிலிருந்து மும்பைக்குக் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.