செய்திகள்

ஆந்திர சூப்பர் ஸ்டாருக்கு எதிராக செருப்பால் அடித்துக் கொண்ட நடிகையால் பரபரப்பு! (விடியோ) 

ஆந்திர சூப்பர் ஸ்டார் நடிகரான பவன் கல்யாணுக்கு எதிராக கருத்துக் கூறி, தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்ட நடிகை ஸ்ரீ ரெட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

DIN

ஹைதராபாத்: ஆந்திர சூப்பர் ஸ்டார் நடிகரான பவன் கல்யாணுக்கு எதிராக கருத்துக் கூறி, தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்ட நடிகை ஸ்ரீ ரெட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சினிமாவில் வாய்ப்புத் தருவதாகச் சொல்லி பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி, தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார் கூறினார். அத்துடன் நில்லாமல் அரை நிர்வாணப் போராட்டமும் நடத்தி இந்தியா முழுவதும் பிரபலமானார் . இதன் காரணமாக தெலுங்கு திரைப்பட உலகம் அதிர்ச்சி அடைந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஆந்திராவின் பிரபல நடிகர் பவன் கல்யாண், ''நடிகை ஸ்ரீரெட்டி தனது பிரச்சினை உண்மை என்றால் நீதிமன்றத்தைதான் நாட வேண்டும்; அதை விடுத்து தொலைக்காட்சிகளில் இது போன்று போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்துவது முறையல்ல. தொலைக்காட்சிகளால் செய்திகளை வழங்க முடியுமே தவிர, நீதி வழங்க இயலாது'' என்று கருத்து தெரிவித்திருந்தார்

இந்நிலையில் ஆந்திர சூப்பர் ஸ்டார் நடிகரான பவன் கல்யாணுக்கு எதிராக கருத்துக் கூறி, தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்ட நடிகை ஸ்ரீ ரெட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

பவன் கல்யாணின் கருத்துக்களால் ஆத்திரமடைந்த நடிகை ஸ்ரீரெட்டி இதற்கு கண்டனம் தெரிவித்து திடீரென செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பவன் கல்யாணை சகோதரராக கருதியதற்கு வருத்தப்படுகிறேன். இனி அவரை யாருமே சகோதரராக எண்ண வேண்டாம். அவரை சகோதரராக கருதியதற்கு என்னையே நான் செருப்பால்தான் அடித்துக் கொள்ள வேண்டும் .

இவ்வாறு கூறிய ஸ்ரீ ரெட்டி, அத்துடன் நில்லாமல் காலிலிருந்த செருப்பைக் கழற்றி பவன் கல்யாணை சகோதரராக கருதியதற்கு செருப்பால் அடித்துக்கொள்கிறேன் என்று தனது கன்னத்தில் தானே செருப்பால் அடித்துக்கொண்டார், பின்னர் தவறான சமிக்கையும் காண்பித்தார்.

அவரது செயலுக்கு எதிர்வினையாக சமூக வலைத்தளங்களில் ஸ்ரீ ரெட்டிக்கு நடிகர் பவன் கல்யாணின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விடியோ:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT