செய்திகள்

ஜோதிகா நடிக்கும் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி மகன்!

ஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கும் இப்படத்துக்கு காற்றின் மொழி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது...

எழில்

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே நடித்து வரும் ஜோதிகா, அடுத்து இந்தியில் வித்யாபாலன் நடித்த "தும்ஹாரி சுலு' வின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். தனஞ்ஜெயனின் பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் வானொலி தொகுப்பாளராக ஜோதிகா நடிக்கவுள்ளார்.

ராதாமோகன் இயக்கும் இப்படத்துக்கு காற்றின் மொழி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. விதார்த், லக்‌ஷ்மி மஞ்சு போன்றோரும் நடிக்கிறார்கள். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியான துமாரி சுலு, ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ. 50 கோடி வசூலித்துள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏ.ஹெச். காஷிஃப் என்கிற புதிய இசையமைப்பாளர் இப்படத்தில் அறிமுகமாகிறார். இவர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ஃபாத்திமாவின் மகன்.

ஜூன் 3 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT