செய்திகள்

சூர்யாவின் சகோதரி பிருந்தா பாடிய பாடல் இதுதான்!

என் குரலின் அடிப்படையில்தான் நான் பாட விரும்புகிறேன். வேறு எந்த செல்வாக்கினாலும் அல்ல...

எழில்

பிருந்தா சிவகுமார். நடிகர் சிவகுமாரின் மகள். சூர்யா, கார்த்தியின் சகோதரி.

கார்த்திக், கெளதம் கார்த்திக் நடிப்பில் திரு இயக்கியுள்ள மிஸ்டர் சந்திரமெளலி படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் பாடகியாக அறிமுகமாகியுள்ளார் பிருந்தா சிவகுமார்

அகரம் ஃபவுண்டேஷனுக்காக பிருந்தா பாடல் ஒன்று பாடியுள்ளார். அதைக் கேட்ட இப்படத்தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளார். 

இதுபற்றி பேட்டியளித்த பிருந்தா கூறியதாவது: 14 வயது முதல் கர்நாடக சங்கீதம் கற்று வருகிறேன். தனஞ்ஜெயன் சார் அளித்த வாய்ப்பு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. என் கனவு நனவாகியுள்ளது. என் குரலின் அடிப்படையில்தான் நான் பாட விரும்புகிறேன். வேறு எந்த செல்வாக்கினாலும் அல்ல. எனவே நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்க நான் யோசிக்கமாட்டேன். 

சாம் சிஎஸ் என் குரலின் மாதிரியை அனுப்பச் சொன்னார். அவருக்கு என் குரல் பிடித்ததும் நான் அவரிடம் வைத்த கோரிக்கை - முதல் பாடல் என்பதால் எளிமையான டியூனாக அளியுங்கள் என்றேன். அதுபோல அவர் எனக்குத் தந்து எனக்கு மகிழ்ச்சியளித்தார். சிறுவயது முதல் அப்பா என்னைப் பாடச்சொல்லி மிகவும் உற்சாகப்படுத்துவார். தினமும் பள்ளியிலிருந்து நான் திரும்பி வந்தவுடன் என்னைப் பாடச் சொல்லி அதைக் கேட்டு மகிழ்வார். என்னுடைய நிஜ குரலில் இருந்து சினிமாவுக்குப் பாடியது வித்தியாசமாக இருந்ததைக் கண்டு சூர்யா அண்ணா ஆச்சர்யப்பட்டார். கார்த்தி என்னுடைய மிகப்பெரிய விமரிசகன். என்னை எப்போதும் கிண்டல் அடிப்பான். ஆனால் இந்தமுறை என்னை மிகவும் உற்சாகப்படுத்தினான் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT