முகப்பு
செய்திகள்

மே 4-ல் வெளியாகவுள்ள படங்கள்!

தயாரிப்பாளர்/விநியோகஸ்தர்/ திரையரங்க உரிமையாளர் ஆகியோர் அடங்கிய திரைப்பட வெளியீட்டு ஒழுங்குபடுத்தும் குழு...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:52 PM
பகிர்:

இருட்டு அறையில் முரட்டு குத்து, காத்திருப்போர் பட்டியல், அலைபேசி, என் பேரு சூர்யா என் வீடு இந்தியா ஆகிய படங்கள் மே 4 அன்று வெளியாக உள்ளன.

தயாரிப்பாளர்/விநியோகஸ்தர்/ திரையரங்க உரிமையாளர் ஆகியோர் அடங்கிய திரைப்பட வெளியீட்டு ஒழுங்குபடுத்தும் குழு, படங்கள் வெளியாகும் தேதியை முடிவு செய்கின்றன. விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - இரும்புத்திரை. இந்தப் படம், மே 11 அன்று வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதையடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து, காத்திருப்போர் பட்டியல், அலைபேசி, என் பேரு சூர்யா என் வீடு இந்தியா ஆகிய படங்கள் மே 4 அன்று வெளியாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கெளதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, கருணாகரன் நடிப்பில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்தப் படத்துக்குத் தணிக்கையில் ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.