செய்திகள்

ரஜினி நடிக்க மறுத்த முதியவர் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்!

மிகவும் ரகசியமாகத்தான் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இத்தகவல்கள் வெளியே வந்தது குறித்து ஆச்சர்யமாக உள்ளது...

எழில்

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கி, கவனம் ஈர்த்த மணிகண்டன் அடுத்ததாக கடைசி விவசாயி என்கிற படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் 70 வயது விவசாயி வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இதற்கு முன்பு, மணிகண்டன் இயக்கிய ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய் சேதுபதி நடித்தார். அதன்பிறகு இப்படத்தின் மூலமாக இருவரும் மீண்டும் இணையவுள்ளார்கள். 

இதுகுறித்து இயக்குநர் மணிகண்டன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இப்படத்தின் முக்கியமான வேடத்தில் நடிக்க ரஜினிகாந்த்தை அணுகினேன். ஆனால் அவரால் நடிக்க முடியாததால், என்னுடைய நல்ல நண்பரான விஜய் சேதுபதியிடம் கேட்க எண்ணினேன். அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை. அவர் மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் மும்முரமாக நடித்துவருகிறார். இன்னும் ஒருவாரத்தில் சரியான தகவல்களைத் தருகிறேன். மிகவும் ரகசியமாகத்தான் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இத்தகவல்கள் வெளியே வந்தது குறித்து ஆச்சர்யமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிவேகம், குறைந்த வயதில் 880 கோல்கள்..! மெஸ்ஸி புதிய சாதனை!

ஆஸி.க்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

திமுக முப்பெரும் விழா தொடங்கியது! கனிமொழிக்கு பெரியார் விருதை வழங்கினார் ஸ்டாலின்!

சவுதி அரேபியா சென்ற பாக். பிரதமர்! ஒரே வாரத்தில் 3வது முறையாக மத்திய கிழக்கு பயணம்!

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

SCROLL FOR NEXT