செய்திகள்

முதல் நாளன்று சென்னையில் ரூ. 1 கோடிக்கும் குறைவாக வசூலித்த விஸ்வரூபம் 2

வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்கள் சென்னையில் முதல் நாளன்று குறைந்தபட்சம்  ரூ. 1 கோடி வசூலைப் பெற்றுவிடும்...

எழில்

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, சேகர் கபூர், ராகுல் போஸ், வஹீதா ரஹ்மான், நாசர் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் 2 படம், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இசை - ஜிப்ரான், பாடல்கள் - வைரமுத்து, கமல்.

நேற்று வெளியான விஸ்வரூபம் 2 படம், பல்வேறு விதமான விமரிசனங்களைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் சென்னையில் இந்தப் படம் ரூ. ஒரு கோடிக்கும் குறைவான வசூலையே பெற்றுள்ளது. 

வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்கள் சென்னையில் முதல் நாளன்று குறைந்தபட்சம்  ரூ. 1 கோடி வசூலைப் பெற்றுவிடும். சமீபத்தில் வெளியான காலா படம் சென்னையில் முதல் நாளன்று ரூ. 1.76 கோடியும் மெர்சல் படம் ரூ. 1.52 கோடியும் விவேகம் படம்  ரூ. 1.21 கோடியும் கபாலி படம் ரூ. 1.12 கோடியும் வசூலாகப் பெற்றன. 

விஸ்வரூபம் 2 படத்தின் முதல்நாள் வசூல் குறித்த அதிகாரபூர்வத் தகவல் இன்னமும் வெளியிடப்படவில்லை. எனினும் திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, விஸ்வரூபம் 2 படம் தன்னுடைய முதல் நாள் வசூலாக சென்னையில் ரூ. 1 கோடிக்கும் குறைவாகவே வசூலித்துள்ளது. அதாவது சென்னையில் அதன் முதல் நாள் வசூல், ரூ. 89 லட்சம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்டை நேரில் கண்டுகளிக்கும் ரோஹித் சர்மா!

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி பரபரப்பு குற்றச்சாட்டு செய்திகள்:சில வரிகளில் 2.8.25

ஆகஸ்ட் 3: சகோதரிகள் நாள்..! கொண்டாடத் தயாரா?

SCROLL FOR NEXT