செய்திகள்

கேரளா வெள்ளத்துக்கு உதவி செய்யவில்லையா?: ரசிகரின் சீண்டலும் காஜல் அகர்வாலின் காரமான பதிலும் 

கேரளா வெள்ளத்துக்கு நீங்கள் உதவி செய்யவில்லையா? என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பிரபல நடிகை காஜல் அகர்வாலின் பதில் சமூக வலைதளங்களில் புகழ்பெற்றுள்ளது.

DIN

புது தில்லி: கேரளா வெள்ளத்துக்கு நீங்கள் உதவி செய்யவில்லையா? என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பிரபல நடிகை காஜல் அகர்வாலின் பதில் சமூக வலைதளங்களில் புகழ்பெற்றுள்ளது.

"கடவுளின் தேசம்"  என்று அழைக்கப்பட்ட கேரள மாநிலம், தற்போது வரலாறு காணாத மழை வெள்ளத்தால் அவதிப்பட்டு  வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் பெய்யாத மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதன் காரணமாக ஏறக்குறைய ரூ. 20 ஆயிரம் கோடியளவுக்கு இழப்பீடுகள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார்  2 லட்சத்து 25 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300-ஐ தாண்டி விட்டது.  இதைத்தொடர்ந்து நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களும் , அமைப்புகளும் மற்றும் தனி நபர்களும் கேரளாவுக்கு நிதி உதவி அளித்து வருகின்றன.

இந்நிலையில் கேரளா வெள்ளத்துக்கு நீங்கள் உதவி செய்யவில்லையா? என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பிரபல நடிகை காஜல் அகர்வாலின் பதில் சமூக வலைதளங்களில் புகழ்பெற்றுள்ளது.

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் நடிகை காஜல் அகர்வாலிடம் ரசிகர் ஒருவர், ‘கேரளா வெள்ளத்துக்காக நீங்கள் எதுவும் பண உதவி செய்யவில்லையே?’ என்று கிண்டல் தொனியில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு காஜல், ‘‘நான் என் கடமையை செய்துவிட்டேன். அதை உங்களிடம் கண்டிப்பாக நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் உதவிக்கு நன்றி’என்று காரமாக பதில் கொடுத்தார்.

அவரது இந்த பதில் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பகிரப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT