முகப்பு
செய்திகள்

இந்த நடிகர் என்னை விட அதிக உயரத்துக்குச் செல்ல வேண்டும்: விஜய் சேதுபதி விருப்பம்!

என்னை விடவும் அதிகமாக முன்னேறவேண்டும் என வாழ்த்துகிறேன். இவர் நல்ல திறமைசாலி...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:

விஜய் சேதுபதி தயாரிப்பில் இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள படம் - மேற்குத் தொடர்ச்சி மலை. லெனின் பாரதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆண்டனி பங்கு, காயத்ரி, ஆறு பாலா, தாமரை போன்றோர் நடித்துள்ளார்கள். திரைப்பட விழாக்களில் பல விருதுகள் பெற்றுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 24 அன்று வெளியானது.

இந்நிலையில் இப்படக்குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். அப்போது படத்தைத் தயாரித்த நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது

மேற்குத் தொடர்ச்சி மலை படத்தை முதலில் பார்த்தபோது எனக்குத் திருப்தியாக இல்லை. ஏனெனில் எனக்கு சினிமா தெரியும், அறிவுள்ளது என எண்ணியிருந்தேன். நான் எதிர்பார்த்தது வேறொரு படமா என்கிற குழப்பமும் இருந்தது. பத்திரிகையாளர்கள் பாராட்டிய பிறகுதான் இந்தப் படத்தின் அருமை தெரிந்தது. என் படங்களை விமரிசித்தபோது எனக்குக் கோபம் வந்துள்ளது. இப்போதுதான் விமரிசனம் பற்றிய புரிதல் ஏற்படுகிறது. நீங்கள் பாராட்டுவது எனக்குச் செருப்படி கொடுத்ததுபோல இருக்கிறது. எனக்குப் பாடம் புகட்டிய அனைவருக்கும் நன்றி. இனி தொடர்ந்து தயாரிப்பீர்களா என்றால் அதை நாம் கேட்கும் கதைதான் முடிவு செய்யவேண்டும். 

Advertisement

இந்தப் படத்தில் நடித்த ஆண்டனி என்னைத் தாண்டி, என்னை விடவும் அதிகமாக முன்னேறவேண்டும் என வாழ்த்துகிறேன். இவர் நல்ல திறமைசாலி என்று பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments