செய்திகள்

ரஜினி நடித்துள்ள பேட்ட: மரண மாஸ் பாடல் வெளியீடு!

மரண மாஸ் என்கிற பாடல் இன்று வெளியாகியுள்ளது. விவேக் எழுதியுள்ள இப்பாடலை எஸ்பிபி-யும் அனிருத்தும் பாடியுள்ளார்கள்...

எழில்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக் போன்றோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இசை - அனிருத். பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ். 

டிசம்பர் 9 அன்று பாடல்கள் வெளியிடப்படும் என்று அறிவித்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மரண மாஸ் என்கிற பாடல் இன்று வெளியாகியுள்ளது. விவேக் எழுதியுள்ள இப்பாடலை எஸ்பிபி-யும் அனிருத்தும் பாடியுள்ளார்கள்.

இதற்கு அடுத்ததாக 7-ம் தேதி 2-வது பாடல் வெளியிடப்படுகிறது. இதனால், முழுப் பாடல்களின் வெளியீட்டுக்கு முன்பு இரு பாடல்கள் வெளியாகவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நின்ற லாரி மீது காா் மோதல் நிதிநிறுவன அதிபா் உயிரிழப்பு

புதுகையில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்து முதியவா் பலி

ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

காலணி விற்பனையகத்தில் ரூ. 45 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT