முகப்பு
செய்திகள்

அமர்க்களமாக நடைபெற்ற பிரியங்கா சோப்ரா திருமணம்! (படங்கள்)

திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளார்கள்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா - பாடகர் நிக் ஜோனாஸ் ஆகிய இருவருக்கும் ஜோத்பூரில் திருமணம் நடைபெற்றுள்ளது. 

கடந்த வருடம் ஒரு நிகழ்ச்சிக்கு நடிகை பிரியங்கா சோப்ராவும் பாடகர் நிக் ஜோனாஸும் ஒன்றாக வந்தது முதல் இருவரைப் பற்றிய கிசுகிசுக்கள் வர ஆரம்பித்தன. அதன்பிறகு பல இடங்களில் இருவரும் ஒன்றாகச் சுற்றுவது குறித்து அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இவர்களின் காதல் தற்போது திருமணப் பந்தமாக மலர்ந்துள்ளது. 

இருவருக்கும் ராஜஸ்தான் - ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் பேலஸில் திருமணம் நடைபெற்றுள்ளது. சனிக்கிழமை கிறிஸ்தவ முறைப்படியும் நேற்று ஹிந்து முறைப்படியும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளார்கள். திருமண நிகழ்வின் புகைப்படங்களை இருவரும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

பே வாட்ச் என்கிற ஹாலிவுட் படம் மற்றும் குவாண்டிகோ என்கிற ஆங்கில தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றில் நடித்து சர்வதேச நடிகையாக உயர்ந்துள்ள பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா, அதிக வருமானம் ஈட்டிய தொலைக்காட்சி நடிகைகளில் ஒருவராக உள்ளார். கடந்த வருடம் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில், உலகளவில் அதிக வருமானம் ஈட்டிய தொலைக்காட்சி நடிகைகளில், பிரியங்கா சோப்ராவுக்கு 8-வது இடம் கிடைத்தது.

முழு கட்டுரையைப் படிக்க →